தவப்பயன்
அந்தத் தவத்தில் மகிழ்ந்த சர்வேஸ்வரன் அவர்கள் முன்தோன்றி உங்களுக்கு யாது வரம் வேண்டும்? என வினவ முனிவர் புத்திரப் பேறு வேண்டும் என்று வேண்டினார்.
முனிவருக்குப் புத்திரப் பேறு குறித்த வரத்தை அளிக்கும் முன்பு சிவன் நூறு வயது வரை வாழும் பிள்ளை வேண்டுமா? அல்லது பதினாறு வயதே வாழக்கூடிய புத்திரன் வேண்டுமா? இதில் நூறு வயது வரை வாழும் பிள்ளைக்கு ஊமை, செவிடு, முடம், வியாதி, சகல தீய குணங்களும் இருக்கும். பதினாறு வயது வரை வாழும் புதல்வனோ மகா அழகனாய் இருப்பான். சகல கலைகளிலும் வல்லவனாய் இருப் பான். என்மீது மட்டற்ற பக்தி பூண்டு வாழ் வான். இவர்களில் எந்த மாதிரியான புத்தி ரன் உனக்கு வேண்டும்? என்றார்.
முனிவர் எந்தப் புத்திரனை வேண்டு வார். நூறுவயது வரை செவிடாகவும், குரு டாகவும் வியாதியஸ்தனாகவும் இருக்கும் பிள்ளையை எவர்தான் வேண்டுவார்? குறைந்த வயது வாழும் புத்திரனையே தேர்வு செய்து வேண்டினார் அவர். தந்தேன் என்று புத்திரப் பேற்றை நல்கி விட்டு மறைந்தார் விஸ்வநாதர்.
புத்திரப்பேறு மார்க்கண்டேயன் அவதாரம்
காசியில் தவம் முடிந்ததும் பத்து மாதத்தில் முனி வரின் பத்தினி அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றார். இளஞ்சூரியனைப் போல் ஒளி வீசினான் அவன். பிரம தேவரே வந்து குழந்தைக்கு மார்க்கண் டேயன் என்று பெயர் சூட்டினார். குழந்தை மகா புத்தி மானாக இருந்தான். ஐந்து வயது ஆவதற்குள்ளாகவே சகல கலைகளையும் கற்று வளர்ந்து விட்டான். அத் தோடு அறிவு, அடக்கம், பெரியவர்களை மதித்தல், அளவிடா சிவபத்தி ஆகியவையோடு கண்டார். வியக்கும் வண்ணம் வாந்தான்.
சிவபக்தியில் சிறந்த திருத்தொண்டன்
அவனுக்குப் பதினைந்து வயது முடிந்து பதினாறு வயதானது. இதுவரை தன் மகனைக் கண்டு ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த மிருகண்டு முனிவரும், அவரது பத்தினியார் மித்திராவதியும் கவலையடைந் தனர். இன்னும் ஓராண்டு தானே நமது அருமை மகன் உயிரோடு இருப்பான் என்பதை உணர்ந்தவர்களாக இருவரும் துன்பக் கடலில் மூழ்கினர்.
பெற்றோர் அடைந்துள்ள இந்தத்துன்ப நிலைக்கு என்ன காரணம் என்று புரியாமல் தத்தளித்த மார்க் கண்டேயன் அதற்கான காரணம் என்ன என்று பெற் றோரை வினவினான். அவர்களும் வேறு வழியின்றி சிவபெருமான் அளித்த வரத்தின் விளைவாக அவன் இன்னும் ஓராண்டே வாழ முடியும் என்பதைக் கூறி வருந்தினர். இதைக் கேட்ட மார்க்கண்டேயன் தந்தையே நீங்கள் இதற்காகத் துளியும் வருந்த வேண்டாம். நமசி வாய மந்திரமும் திருநீறும் எமக்குத் துணையிருக்கும். எம்மைக் காக்கும் சிவபரம் பொருள் ஒருபோதும் எம்மைக் கைவிடார். எனவே துணிவோடு இருங்கள்! என்று கூறி விடைபெற்று காசிக்குச் சென்று மணிகர்ணி கையில் நீராடினான். அங்கு சிவலிங்கம் ஒன்றை நிறுவி அதற்கு நறுமலர் சாத்தி வணங்கி தவம் செய்யலானான்.
சிவபரம் பொருளின் அனுக்கிரகம்
சிவபெருமானும் அவனது தவத்தில் இன்புற்று அவன் முன்பாகத் தோன்றினார். உனக்கு யாது வரம் வேண்டும்? என்று வினவ மார்க்கண்டேயன் அவர் காலடியில் விழுந்து வணங்கி அவரைப் பலவாறு போற்றித் துதித்துத் தன்னைக் காலன் கைபடா வண்ணம் காத்தருள வேண் டுகிறேன் என்றான். அவரும் மார்க்கண்டேயா! நீ அஞ்ச வேண்டாம். அந்தகனின் பிடியிலிருந்து நம் அருள் உன் னைக் காப்பாற்றும்! என்று வரமருளி மறைந்தார். மார்க் கண்டேயர் தன் வாழ்நாளைப் பற்றிக் கவலைப்படாமல் சதா சிவபூஜையில் திளைத்திருந்தார். பதினாறு ஆண்டு கள் நிறைவடைந்தன.
யமதர்மராஜன் மேற்கொண்ட சபதம்
யமதூதன் சிவபூஜையிலிருந்த மார்க்கண்டேயனை அனுக அஞ்சி மேல் உலகு சென்று யமதர்ம ராஜனிடம் விடயத்தைக் கூறுகிறான்.
யமன் தன் கணக்கரான சித்திரகுப்தனை விளித்து மார்க்கண்டேயனது கணக்கைக் கூறுமாறு கேட்கிறான்.
சித்திரகுப்பதனோ பிரபு! மார்க்கண்டேயனுக்கு ஈசன் தந்த பதினாறு ஆண்டு காலம் முடிந்தது. விதியை வென் றவர் எவருமிலர். மார்க்கண்டேயரின் சிவ பூஜையின் பலனாய் அவருடைய புண்ணியம் மிக அதிகரித்து விட் டது. அதனால் அவர் எமது உலகிற்கு வர நியாயமில்லை. நேராகக் கைலாயம் செல்வதற்கு தயாராய் இருக்கிறார் என்றார்.
காலன் மேற்கொண்ட முயற்சி!
சித்திரகுப்தன் கூறிய விடயங்களைக் கேள்வியுற்ற யமதர்ம ராஜன் தனது அமைச்சனான காலனை அழை த்து மார்க்கண்டேயனைப் பிடித்து வரும்படி ஆணை யிடுகிறான்.
காலன் மார்க்கண்டேயனிடம் சென்று மிகவும் நய மாகப் பேசித் தன்னுடன் வந்து விடுமாறு அழைக்கிறான். தன்னுடன் வந்தால் யமன் இந்திரப் பதவி வாங்கித் தருவார் என்றும் ஆசை காட்டுகிறான்.
மார்க்கண்டேயன் கொண்டபக்தி
ஆனால் மார்க்கண்டேயன் எதையும் பொருட்படுத் தாது சிவபூஜையில் திளைத்திருந்தான். போம் அய்யா சிவனடிக்கு அன்பு செய்தோர் இந்திரப் பதவி என்ன வேறு எந்தப் பதவியையும் விரும்பார். போய் உம் எஜமானிடம் சொல்லும் என்று கூறி விடுகிறான்.
சிவனடியார்க்கு அருளிய பரம்பொருள்
இதையறிந்த யமதர்மராஜனுக்குக் கடுங்கோபம் வந்தது. தன் வாகனமேறிப் பாசக் கயிற்றைச் சுழற்றிய படி மார்க்கண்டேயன் இருப்பிடம் வந்த டைந்தார். மார்க்கண்டேயா என்ன நினைத் துக் கொண்டிருக்கிறாய் நீ? ஈசனார் உனக்கு உவந்தளித்தது பதினாறு வயது தான் என்பதை மறந்தாயா? நீ புரியும் சிவ பூஜை உன் பாவத்தை நீக்குமேயன்றி நான் வீசும் பாசக்கயிற்றைத்தடுக்காது.
பிறப்பு, இறப்பு என்ற துன்பம் கமலக் கண்ணனுக்குமுண்டு. எனக்குமுண்டு. பிறப்பு, இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒரு வரே. தேவர் மூவர் மற்றும் எவர் உன் னைக் காப்பாற்ற முயன்றாலும் உன் உயிரைக் கொண்டு போகாமல் நான் யமலோகம் திரும்ப மாட்டேன்! என்று கூறினார்.
ஆனால் எந்தவித சலனமும் இன்றி யமதர்மராஜன் கூறிய விடயங்களை அமைதியாகக் கேட்டிருந்த மார்க்கண் டேயனோ யமதர்மராஜனே! சிவனடியார் பெருமை குறித்து நீ உணரவில்லை. என் னுடைய உயிர் பிரிந்தாலும் நான் சிவ பதமடைவேனே தவிர, உன்னுடன் வர மாட்டேன் என்று கூறி ஆலயத்தினுள் சென்று சிவலிங்கத்தைத் தழுவி நின்றான். யமதர்மராஜனும் உள்ளே சென்று மார்க்கண்டேயனை அவன் அணைத் திருந்த சிவலிங்கத் தோடு சேர்த்து தன் பாசக் கயிற்றை வீசி இழுத்தான்.
அந்த சந்தர்ப்பத்திலே சிவபரம் பொருள் சிவலிங் கத்தினின்றும் வெளிப்பட்டு மார்க்கண்டேயா நீ அஞ் சாதே! என்றுகூறி தன் இடது பாதத்தை தூக்கி யமதர் மராஜனை உதைத்தார். அக்கணமே அவன் தன் பரிவா ரங்களுடன் உயிர் துறந்தான்.
சிவபெருமான் மார்க்கண்டேயனுக்கு அந்தமிலா ஆயுளை வழங்கி மறைந்தார். மார்க்கண்டேயர் மகிழ் வுடன் இல்லம் ஏகி தன் பெற்றோரிடம் நடந்த விடயங் களைக்கூற அவர்கள் சிவபெருமானின் கருணையை எண்ணி எண்ணிக் கண்ணீர் மல்கினார்.
இறை மகத்துவத்தைப் போற்றித் துதிப்போம்
இது இப்படி இருக்க யமதர்மராஜன் உயிரிழந்ததால் பூமியில் எவருக்கும் மரணமேயில்லாமல் போய் விட்டது! மக்கள் பெருக்கம் அதிகமாகிப் பூமி அந்தப்பாரத்தால் நிலை தடுமாறியது.
இதை அவதானித்த தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபரம்பொரு ளும் உலக இயங்கு நிலையை சீர் செய்யும் விதமாக யமதர்மராஜனை உயிர்ப்பித்தார். அவன் தொழிலைத் தொடருமாறு பணித்தார்.
இத்தகு மார்க்கண்டேயர் வரலாறு சிவன் கோவில் களில் இயம சங்காரத் திருவிழாவாக ஐப்பசி கடைசி வெள்ளிக்கிழமையில் நடைபெறுகிறது.
செந்நாப்புலவர் காரை. எம்.பி. அருளானந்தன்
COMMENTS