வரலாற்றுப் புகழ்மிக்க இவ்வாலயம், சிலாபம் நகரிற்கு அண்மையில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம், அழகேஸ்வரம் எனவும் வழங்கப்படுகிறது.
இவ்வாலயத்தின் இறைவன் பெயர் முன்னைநாதர்; இறைவி பெயர்
வடிவாம்பிகை; தலவிருட்சம் அரசமரம்; தீர்த்தம் மாயவனாறு (தெதுறு ஓயா).
இராமன், இராவணனைக் கொன்றதால் வந்த பிரம்மஹத்தி தோஷத்தை இவ்வாலயத்தில் வழிபட்டு நீக்கினான் என்று புராண வரலாறு கூறும். அடியார்கள் இவ்வாலயத் தீர்த்தத்தில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவர்.
இத்தலத்தை இராமன், வியாசர் முதலியோர் வழிபட்டதாகத் தட்சி
ணகைலாய புராணம் குறிப்பிடுகிறது. குளக்கோட்ட மன்னனும், 6ஆம், 9ஆம் பராக்கிரபாகு மன்னர்களும் இவ்வாலயத்தைப் புனருத்தாரணம் செய்தும் மானியங்கள் வழங்கியும் தொண்டு செய்துள்ளனர்.
போர்த்துக்கேயர் காலத்தில் இவ்வாலயம் அவர்களால் அழிக்கப்பட்டு, பொருட்களும் சூறையாடப்பட்டன. பிற்காலத்தில் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் என்ற மன்னன், இந்தியச் சிற்பிகளைக் கொண்டு ஆலயத்தை மீள அமைத்துக் கும்பாபிஷேகமும் செய்வித்தான்.
இவ்வாலயத்தில் வருடந்தோறும் இரு மகோற்சவங்கள் நடைபெறுகின்றன. மகோற்சவ காலத்தில் 63 நாயன்மாருக்கு நடைபெறும் பக்தோற்சவமும், வேட்டைத் திருவிழாவும் சிறப்பானவை. ஏனைய நித்திய, நைமித்திய கிரியைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
ஆலயத்துக்கு உரிய பல தனித்துவமான மரபுகளையும், வரலாறுகளையும் கொண்ட இவ்வாலயம் தமிழ், சிங்கள மக்களின் ஒற்றுமைக்குப் பாலமாகவும், ஈழத்து மக்களின் ஆன்மீக விருத்திக்கு ஆதாரமாகவும் விளங்குகின்றது.

COMMENTS