சிற்பவடிவில் செதுக்கியோ செப்புருவாய் வார்த்தெடுத்தோ பிரதிஷ்டை செய்யப்படாது தாமாகவே தோன்றி வழிபாட்டிற்கு இடமாகும் தெய்வ உருவங்கள் சுயம்பு மூர்த்தம் என வழங்கப்படும். நயினை ஆலயத்தின் கருவறையிலே ஐந்துதலைநாகமும் அம்பாளும் இணைந்த விக்கிரகம் உள்ளது. அம்பாளின் விக்கிரகம் ஆயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்தது எனவும் அதன் முன்பே நாகப்பிரதிஷ்டை ஏற்பட்டிருக்கலாம எனவும் காரைக்குடி எம்.செல்லக்கண்ணுஸ்பதியார் 11-03-1951 இல்வெளியான 'வீரகேசரி' யில் குறிப்பிட்டுள்ளார்.
சிற்பசாஸ்திர ஆராய்ச்சியாளர் எம்.நரசிம்மன் அவர்கள் கூறியுள்ள
பின்வரும் கருத்து (28-08-1983 கும்பாபிஷேக மலர்) நயினையில் நாகவழிபாடு எத்துணைப் பழமையானது என்பதை அறிந்து கொள்ள உதவும்.
'நயினாதீவின் மூலஸ்தானத்தில் அம்மன் உருவம் போல் இருப்பது பழைய நாகப்பிரதிஷ்டையே. இது மிகவும் தேய்ந்து அம்மன் உருவம் போலத் தெரிகிறது. இதற்குப் பின்னர் ஐந்துதலை நாகப்பிரதிஷ்டை ஒன்று உண்டு. இந்தியாவிலும் நாகவழிபாட்டிற்கே பிரத்தியேகமாகவுள்ள இவ்வளவு புராதன கோயிலைக் காண்பதரிது. கலக்கற்ற தூய்மையான நாக வழிபாட்டுப் பண்பினை நயினாதீவிற் காணலாம். அந்த நாகச்சிலை பதினான்காயிரம் வருடப் பழமையுடையது. இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் வேறு எங்கும் பார்க்க முடியாத பிரத்தியட்ச உருவமாக, சர்ப்ப வழிபாட்டின் தொன்மைக் கருவூலமாக இது இருக்கிறது.
நாகவழிபாட்டிலே தொடங்கி, காலப்போக்கில் நாகபூசணி வழிபாடாக வளர்ந்து அவ்வழிபாட்டின் ஆறாத் தொடர்ச்சியின் மகோன்னத நினைவுச்சின்னமாக நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயம் விளங்குகின்றது. நயினாதீவுக்கு இடப்பட்ட பழைய பெயர் நாகதீவு அல்லது நாகத்தீவு என்று கொள்ளலே பொருத்தமாகத் தெரிகின்றது. பிறிதொரு காலத்தில், வட இலங்கை முழுவதுமே, நாகதீவு என்றழைக்கப்படலாயிற்று. இப்பெயரே பின்னர் இலங்கை முழுவதற்கும் இடப்படுவிட்டது எனலாம்.
இம்மணித்தீவு நாகத்துவீபம் என வழங்குவதாலும் நாகம், நாகர் தொடர்புகளின் தொன்மை புலப்படுவதாலும். இலங்கை எங்கணுமுள்ள ஆலயங்கள் யாவிலும் மிகவும் பழைமை வாய்ந்தது நயினை நாகபூஷணி ஆலயமே என்பதும் ஐயமின்றிப்
பெறப்படுகின்றது.
நன்றி - இந்து ஒளி, அகில இலங்கை இந்து மாமன்றம்

COMMENTS