இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாசி மக இலட்சார்ச்சனை உற்சவம் சிறப்பாக இடம்பெற்றன.
இவ் உற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ செந்தில் குகநாதக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இவ் உற்சவ கிரிகைகளை நடாத்திவைத்தனர்.
இதில் கருவரையில் வீற்று யிருக்கும் அம்மனுக்கு,விசேட அபிசேங்கள் ஆராதனை என்ப இடம்பெற்று பின்னர் வசந்தமண்டபத்தில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ கருமாரி முத்து மாரியம்மனுக்கு 1008 சரசநாம அர்ச்சனையும் அதனை தொடர்ந்து தீபராதனையும் இடம்பெற்றன.
COMMENTS